2 நாள்கள் நடைபெறும் 3வது வருடாந்திர உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF – World Economic Forum) உலகளாவிய எதிர்கால மன்றங்களின் கூடுகை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது.
அதன் குறிக்கோளானது சிக்கலான உலகளாவிய சவால்களுக்கு பயன்படக் கூடிய புதிய யோசனைகள் மற்றும் மாதிரிகளை அடையாளம் காண்பதாகும்.
இவ்வருட கூடுகையின் கருத்துரு “உலக மயமாக்கம் 4.0 : நான்காம் தொழில்துறைப் புரட்சியின் காலத்தில் உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குதல்” என்பதாகும்.
இந்தக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள் ஆனது 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூடுகை மாநாடு 2019ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.