மத்திய அமைச்சரவையின் இளம் அமைச்சரான இராம் மோகன் நாயுடு, உலகப் பொருளாதார மன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் இளம் தலைவர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஐம்பது நாடுகளைச் சேர்ந்த சுமார் 116 தலைவர்களைக் கொண்ட 2025 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஏழு இந்தியர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
OYO நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால், அலோக் மெடிகேபுரா அனில், நடராஜன் சங்கர், நிபுன் மல்ஹோத்ரா மற்றும் அனுராக் மாலூ ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.