TNPSC Thervupettagam

WEF தொழில்நுட்ப முன்னோடி நிறுவனங்களின் பட்டியல் 2024

June 15 , 2024 161 days 291 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது ஒவ்வோர் ஆண்டும் மக்கள் மற்றும் கிரகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக செல்வாக்கு மிக்க அரசியல், வணிக மற்றும் கலாச்சாரத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற 100 நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
  • WEF அதன் 2024 ஆம் ஆண்டு தொழில்நுட்ப முன்னோடி என்ற திட்டத்திற்காக 10 இந்திய தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, தூய்மையான ஆற்றல், சுகாதாரம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் நரம்பியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தங்கள் புதுமையான பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • Amperehour Solar, Cropin, Entri, HealthPlix, International Battery Company, Niramai, NxtWave, Pixxel, Sarvam AI, மற்றும் String Bio ஆகிய இந்திய நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • அவை 23 நாடுகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்