உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 39வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தாலும், தெற்காசியாவிலும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களிலும் இந்தியா மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை 2024 ஆம் ஆண்டு பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
ஜெர்மனி 6வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு, சீனா, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.
2021 ஆம் ஆண்டில் முன்னர் வெளியிடப்பட்ட குறியீட்டில் இந்தியா 54வது இடத்தில் இருந்தது.