TNPSC Thervupettagam
January 24 , 2020 1675 days 601 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (World Economic Forum - WEF) தனது 50வது வருடாந்திரக் கூட்டத்தை சுவிட்சர்லாந்தின் டாவோஸில் தொடங்கியது.
  • இந்த ஆண்டின் இந்தக் கூட்டமானது அடுத்தப் பத்தாண்டுகளில் 1 டிரில்லியன் மரங்களை நடவு செய்யும் தனது முயற்சியின் மீதும் 1 பில்லியன் மக்களை நான்காவது தொழில்துறை புரட்சியுடன் இணைப்பதின் மீதும் கவனம் செலுத்த இருக்கின்றது.
  • இணைய வழிக் குற்றங்களில் கடவுச் சொற்களின் பங்கு குறித்த ஒரு அறிக்கையை இந்த மன்றமானது வெளியிட்டுள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றமானது 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP - United Nations Environment Programme) தொடங்கப்பட்ட  “டிரில்லியன் மரங்களுக்கான பிரச்சாரம்” என்ற திட்டத்தில் “பில்லியன் மரங்களுக்கானப் பிரச்சாரம்” என்ற வகையில் இணைந்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில், இந்தத் திட்டமானது “பிளான்ட் ஃபார் தி பிளானட்” (ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்) என்ற ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மீண்டும் திறன் அளித்தல் (Reskilling)

  • உலகப் பொருளாதார மன்றத்தில் தொடங்கப்பட்ட “மீண்டும் திறன் அளித்தல்” என்ற ஒரு  புரட்சிகரமான  முயற்சியில் இந்தியா நிறுவன உறுப்பினராக இணைந்துள்ளது.
  • இது நான்காவது தொழில்துறைப் புரட்சியால் அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள உலக நாடுகளின் பொருளாதாரங்களுக்கு உதவுகின்றது.
  • அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, பாகிஸ்தான், பிரான்சு மற்றும் பிரேசில் ஆகியவை இந்த முயற்சியின் மற்ற நிறுவன உறுப்பினர் நாடுகளாகும்.
  • மீண்டும் திறன் அளித்தலை அடைவதற்காக, உலகப் பொருளாதார மன்றமானது "எதிர்காலப் பணிகள்: புதிய பொருளாதாரத்தில் விவரமாக்கல் வாய்ப்புகள்" என்ற ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
  • நான்காவது தொழில்துறைப் புரட்சி என்பது ரோபோடிக்ஸ் (எந்திரனியல்), இணையங்களுக்கான பொருள்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வகையில் ஒரு மேம்படுத்தும் சூழல் அமைப்பாகும்.
  • நான்காவது தொழில்துறைப் புரட்சி இயந்திரத்தால் இயக்கப்படும் எந்திர மயமாக்கத்தை அதிகரித்துள்ளது. இது இந்தப் பணியில் பங்கெடுத்துள்ள தொழிலாளர் சக்தியை உருமாற்றி அமைத்துள்ளது.

காலநிலை அறிவியல்

  • WEF காலநிலை அறிவியல் குறித்த தனது கருத்துக் கணிப்பையும் வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆய்வின் படி, இந்தியாவும் வங்கதேசமும் காலநிலை அறிவியலில் மிகவும் நம்பிக்கை கொண்ட நாடுகளாக உள்ளன.
  • அதே வேளையில், காலநிலை அறிவியல் பற்றி தங்களை மேம்படுத்திக் கொள்வதில் உக்ரைனும் ரஷ்யாவும் மிகவும் பின்தங்கியுள்ளன.
  • இந்த உலகமானது காலநிலை அறிவியல் மீதான தனது நம்பிக்கையை இழந்து விட்டதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்த ஆய்வின் படி, புவி வெப்பமடைதலானது முக்கியமாக மனித நடவடிக்கைகளால் ஏற்படுகின்றது என்று உலகம் நம்புகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் இந்த ஆய்வின் கருப்பொருள்: “மேலும் நிலையான உலகத்தை நோக்கி மற்றும் இன்னும் ஒத்திசைவான உலகத்தை நோக்கி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்