TNPSC Thervupettagam

WEF மன்றத்தின் GPAP முன்னெடுப்பில் 7 புதிய உறுப்பினர்கள்

January 29 , 2025 25 days 58 0
  • உலகளாவிய நெகிழிக் குறைப்பு நடவடிக்கை கூட்டாண்மை (GPAP) என்பது உலகப் பொருளாதார மன்றத்தினால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது சமீபத்தில் சுமார் 25 நாடுகளை உள்ளடக்கிய வகையில் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • அங்கோலா, வங்காளதேசம், காபோன், கௌதிமாலா, கென்யா, செனேகல் மற்றும் தான்சானியா ஆகிய ஏழு புதிய நாடுகள் இந்த முக்கிய கூட்டாண்மை முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
  • நெகிழித் துறை ஆனது ஆண்டுதோறும் சுமார் 1.8 பில்லியன் டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும், சுமார் ஆறு மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் பெருங்கடல்களில் கலக்கின்றன என்பதோடு அதற்கும் மேலான அளவிலான நெகிழிகள் நிலத்தினை மாசுபடுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்