அமெரிக்க விண்வெளி நிறுவனமானது தனது முதலாவது தலைமை வானியல் அறிஞரான நான்சி கிரேஸ் ரோமன் என்பவரின் நினைவாக தனது பரந்த வெளி அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கிக் கருவிக்கு (WFIRST - Wide-Field Infrared Survey Telescope) மறுபெயரிட்டுள்ளது.
இந்த அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியானது நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி என்றறியப்பட இருக்கின்றது. இது 2015 ஆம் ஆண்டில் செலுத்தப்பட இருக்கின்றது.
நான்சி கிரேஸ் ரோமன் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் தாய் என்றும் அறியப்படுகின்றார்.