TNPSC Thervupettagam

WHOவிற்கு நிதியளித்தல்

April 17 , 2020 1591 days 650 0
  • அமெரிக்க நாடானது உலகச் சுகாதார அமைப்பிற்கு (WHO - World Health Organization) தான் அளிக்கும் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
  • இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 400-500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளித்து வருகின்றது.
  • 4 முக்கியமான நிதிப் பங்களிப்புகள் WHOவின் நிதியை ஏற்படுத்துகின்றன.
  • இதில் மதிப்பீடு செய்யப்பட்ட பங்களிப்பு, தன்னார்வப் பங்களிப்பு, முக்கியமான தன்னார்வப் பங்களிப்புகள் மற்றும் பிஐபி பங்களிப்புகள் (PIP - Pandemic Influenza Preparedness) ஆகியவை அடங்கும்.
  • மதிப்பீடு செய்யப்பட்ட பங்களிப்புகள் என்பது உறுப்பு நாடுகளால் செலுத்தப்படும் நிதியைக் குறிக்கின்றது. 
  • தன்னார்வப் பங்களிப்புகள் என்பது தனியார் அமைப்புகளின் மூலம் உறுப்பு நாடுகளால் வழங்கப்படும் நிதியைக் குறிக்கின்றது.
  • முக்கியமான தன்னார்வப் பங்களிப்புகள் என்பது உடனடியாகத் தேவைப்படும் நிதியைக் குறிக்கின்றது.
  • பிஐபி பங்களிப்புகள் என்பது வளரும் நாடுகளால் தடுப்பு மருந்துகளை அணுகுவதை வலுப்படுத்துவதற்காக 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இன்புளூயன்சா தொற்று நோய்க்கான தயார்நிலை (PIP - Pandemic Influenza Preparedness) நிதியைக் குறிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்