TNPSC Thervupettagam

WHO ஆல் வெளியிடப்பட்ட புற்றுநோய் குறித்த அறிக்கை

February 8 , 2020 1752 days 739 0
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று உலகப் புற்றுநோய் தினத்தை குறிக்கும் வகையில், WHO மற்றும் அதன் சிறப்பு அமைப்பான சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC - International Agency for Research on Cancer) ஆகியவை பின்வரும் 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
    • WHO ஆல் வெளியிடப்பட்ட “புற்றுநோய் குறித்த அறிக்கை: முன்னுரிமைகளை அமைத்தல், பயனுள்ள வகையில் முதலீடு செய்தல் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தல்”.
    • IARC ஆல் வெளியிடப்பட்ட புற்றுநோயைத் தடுப்பதற்கான புற்றுநோய் ஆராய்ச்சி  அறிக்கையான உலக புற்றுநோய் அறிக்கை“.
  • இது நோய் குறித்த உலகளாவிய செயல் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.
  • உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 10 இந்தியர்களில் ஒருவர் தங்களது வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 நபர்களில் ஒருவர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
  • இந்தியாவில் கூடுதலாக 11.6 மில்லியன் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 2018 ஆம் ஆண்டில் 7,84,800 நபர்கள் புற்றுநோயால் இறந்தனர்.
  • உலகளவில் புகைப்பிடிப்பவர்களில் 50 சதவிகிதத்தினர் சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
  • வருமானம் குறைந்த நாடுகளில் (ஏழை நாடுகளில்) 2040 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகள் 81% அளவிற்கு அதிகரிக்கும் என்று WHO கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்