இது நிலையான மருத்துவ ஆராய்ச்சி உள்கட்டமைப்பிற்கான உலகளாவிய தொலைநோக்குப் பார்வையை விவாதித்து உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்தியாவில், 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது (CDSCO) மருத்துவப் பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துகிறது.
இந்திய மருத்துவப் பரிசோதனைகள் பதிவு (CTRI) என்பது ஒரு இலவச இணையப் பொதுப் பதிவு அமைப்பாக 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள ICMR அமைப்பால் பராமரிக்கப்படுகிறது.
இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய மருத்துவப் பரிசோதனைப் பதிவகமாகும்.
பொது மருந்துக் கட்டுப்பாட்டாளர் (இந்தியா) (DCGI) அறிவுறுத்தலின் படி, CTRI அமைப்பில் ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனைக்கும் பதிவு செய்வது கட்டாயமாகும்.