புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பு உடன்படிக்கை (WHO FCTC) ஆனது நடைமுறைக்கு வந்ததன் 20 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடப்பட்டது.
WHO FCTC என்பது உலக சுகாதார அமைப்பின் கீழ் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப் பட்ட முதல் பொது சுகாதார ஒப்பந்தமாகும்.
இந்த உடன்படிக்கையில் உலக மக்கள்தொகையில் 90% பங்கினை உள்ளடக்கிய 183 நாடுகள் உள்ளன.
இந்த ஒப்பந்தம் ஆனது, ஒரு சட்டக் கட்டமைப்பையும், சான்றுகள் சார்ந்த புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விரிவான தொகுப்பையும் வழங்குகிறது.
இருப்பினும், இந்தியாவில் 267 மில்லியன் புகையிலைப் பயனர்கள் உள்ளனர் என்ற ஒரு நிலையில் இந்தியாவினை உலகின் இரண்டாவது பெரியப் புகையிலைப் பயனர்கள் கொண்ட நாடாக இது ஆக்குகிறது.
இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆனது, 2003 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தடை மற்றும் ஒழுங்குமுறை) என்ற சட்டத்தினால் (COTPA) நிர்வகிக்கப்படுகின்றன.