TNPSC Thervupettagam

Who is Financing Fossil Fuel Expansion in Africa? - அறிக்கை

December 15 , 2022 581 days 309 0
  • "ஆப்பிரிக்காவில் புதைபடிவ எரிபொருள் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பது யார்?" (Who is Financing Fossil Fuel Expansion in Africa?) என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையானது எகிப்தில் நடந்த 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • தற்போது சுமார் 200 நிறுவனங்கள் ஆனது, 55 ஆப்பிரிக்க நாடுகளுள் 48 நாடுகளில் புதிய புதைபடிவ எரிபொருள் இருப்புக்கள் அல்லது உள்கட்டமைப்பை ஆராய்ந்து அல்லது அதை மேம்படுத்தி வருகின்றன.
  • இவற்றில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள், குழாய் இணைப்புகள் அல்லது எரிவாயு மற்றும் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை அடங்கும்.
  • 18 ஆப்பிரிக்க நாடுகள் தற்போதுள்ள எண்ணெய் அல்லது எரிவாயு உற்பத்தியில் சிறிதளவு கூட கொண்டிராத எல்லைப்புற நாடுகளாகும்.
  • ஆப்பிரிக்காவில் உள்ள 20 முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும்.
  • இந்த புதிய எண்ணெய் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பிரித்தெடுத்தல் மற்றும் எரிப்பு ஆகிய செயல்முறைகள் 8 ஜிகா டன்கள் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வினை ஏற்படுத்தும்.
  • ஆப்பிரிக்காவில் புதைபடிவ எரிபொருள் விரிவாக்கத்திற்கான நாடு வாரியான வங்கி நிதியுதவியின் அடிப்படையில், ஐரோப்பா (40 சதவீதம்), அமெரிக்கா (20 சதவீதம்) மற்றும் இந்தியா (3 சதவீதம்) ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
  • இந்தப் புதிய திட்டங்கள் அந்தக் கண்டத்தின் புதைபடிவ எரிபொருளின் திறனை அதிகரிக்கச் செய்தாலும், இந்தத் மையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஒரு சிறிய பங்கு மட்டுமே உள்நாட்டு நுகர்வுக்குப் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்