Who is Financing Fossil Fuel Expansion in Africa? - அறிக்கை
December 15 , 2022 841 days 449 0
"ஆப்பிரிக்காவில் புதைபடிவ எரிபொருள் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பது யார்?" (Who is Financing Fossil Fuel Expansion in Africa?) என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையானது எகிப்தில் நடந்த 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
தற்போது சுமார் 200 நிறுவனங்கள் ஆனது, 55 ஆப்பிரிக்க நாடுகளுள் 48 நாடுகளில் புதிய புதைபடிவ எரிபொருள் இருப்புக்கள் அல்லது உள்கட்டமைப்பை ஆராய்ந்து அல்லது அதை மேம்படுத்தி வருகின்றன.
இவற்றில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள், குழாய் இணைப்புகள் அல்லது எரிவாயு மற்றும் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை அடங்கும்.
18 ஆப்பிரிக்க நாடுகள் தற்போதுள்ள எண்ணெய் அல்லது எரிவாயு உற்பத்தியில் சிறிதளவு கூட கொண்டிராத எல்லைப்புற நாடுகளாகும்.
ஆப்பிரிக்காவில் உள்ள 20 முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும்.
இந்த புதிய எண்ணெய் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பிரித்தெடுத்தல் மற்றும் எரிப்பு ஆகிய செயல்முறைகள் 8 ஜிகா டன்கள் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வினை ஏற்படுத்தும்.
ஆப்பிரிக்காவில் புதைபடிவ எரிபொருள் விரிவாக்கத்திற்கான நாடு வாரியான வங்கி நிதியுதவியின் அடிப்படையில், ஐரோப்பா (40 சதவீதம்), அமெரிக்கா (20 சதவீதம்) மற்றும் இந்தியா (3 சதவீதம்) ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
இந்தப் புதிய திட்டங்கள் அந்தக் கண்டத்தின் புதைபடிவ எரிபொருளின் திறனை அதிகரிக்கச் செய்தாலும், இந்தத் மையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஒரு சிறிய பங்கு மட்டுமே உள்நாட்டு நுகர்வுக்குப் பயன்படுத்தப் படுகிறது.