TNPSC Thervupettagam
July 12 , 2023 501 days 305 0
  • உலக சுகாதார அமைப்பு/யுனிசெப் அமைப்புகளின் குடிநீர் வழங்கீடு, தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கான ஒரு கூட்டுக் கண்காணிப்புத் திட்ட அமைப்பானது (JMP) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
  • இது 1990 ஆம் ஆண்டு முதல் குடிநீர் வழங்கீடு, தூய்மை மற்றும் சுகாதாரம் (WASH) ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்த நாடு, பிராந்திய மற்றும் உலக அளவிலான மதிப்பீடுகளை வழங்குகிறது.
  • JMP 2023 புதிய அறிக்கையானது 2022 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 27% (2.2 பில்லியன் மக்கள்) பேர் “பாதுகாப்பான முறையில் வழங்கப்படும் குடிநீர்” (வீட்டிலேயே பாதுகாப்பான முறையில் தண்ணீர் பெறுதல்) போன்ற வசதியினைப் பெறவில்லை என்று மதிப்பிட்டுள்ளது.
  • இதில் 1.5 பில்லியன் மக்கள் அடிப்படை குடிநீர் வழங்கீட்டுச் சேவையினை, அதாவது வீட்டிற்கு வெளியே அமைந்த நீர் வழங்கீட்டு வசதிகள் மூலமான எந்த நேரமும் கிடைக்காத வகையில் அல்லது பாதுகாப்பற்ற வகையிலான குடிநீர்ச் சேவையினைப் பெற்றுள்ளனர்.
  • மீதமுள்ள 703 மில்லியன் மக்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத வகையிலான வீட்டிற்கு வெளியே உள்ள நீர் மூலங்களிலிருந்துத் தண்ணீரைச் சேகரிக்க 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
  • 296 மில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தினர் அல்லது மாசுபட்ட, ஆறுகள் அல்லது ஏரிகளில் இருந்து (115 மில்லியன்) சுத்திகரிக்கப் படாத நீரை எடுத்துப் பயன்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்