TNPSC Thervupettagam

WHO-UNICEF அறிக்கை 2024

July 19 , 2024 130 days 202 0
  • 2023 ஆம் ஆண்டில் எந்தவொரு தடுப்பூசியினையும் போடப் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2.1 மில்லியன் அளவில் "எந்தவொரு தடுப்பூசியும் பெறாத குழந்தைகள்" எண்ணிக்கை கொண்ட நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக 1.6 மில்லியன் எண்ணிக்கையுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • முற்றிலும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆனது ("ஜீரோ-டோஸ்") கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது (13.9 மில்லியனாக இருந்த இதன் எண்ணிக்கை 600,000 உயர்ந்து 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது).
  • இந்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 1.7 மில்லியன் அதிகமாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் தடுப்பூசி போடப்படாத மற்றும் குறைவான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பெற்ற குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 21 மில்லியனாக உள்ளது என்ற நிலையில் இது அடிப்படை மதிப்பை விட 2.7 மில்லியன் அதிகமாகும்.
  • இந்தியா 1.6 மில்லியன் என்ற எண்ணிக்கையில் மூன்றாவது அதிக எண்ணிக்கையில் "தட்டம்மை தடுப்பூசி பெறாத குழந்தைகள்" உள்ள நாடாக உள்ளது.
  • சுமார் 2.8 மில்லியன் குழந்தைகளுடன் நைஜீரியாவும், 2 மில்லியன் குழந்தைகளுடன் காங்கோ ஜனநாயகக் குடியரசும் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன.
  • உலகளவில் தட்டம்மைத் தடுப்பூசிகள் பெறாத 55% குழந்தைகளைக் கொண்ட பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்