2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று உலகப் புற்றுநோய் தினத்தை குறிக்கும் வகையில், WHO மற்றும் அதன் சிறப்பு அமைப்பான சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC - International Agency for Research on Cancer) ஆகியவை பின்வரும் 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
WHO ஆல் வெளியிடப்பட்ட “புற்றுநோய் குறித்த அறிக்கை: முன்னுரிமைகளை அமைத்தல், பயனுள்ள வகையில் முதலீடு செய்தல் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தல்”.
IARC ஆல் வெளியிடப்பட்ட புற்றுநோயைத் தடுப்பதற்கான புற்றுநோய் ஆராய்ச்சி அறிக்கையான “உலக புற்றுநோய் அறிக்கை“.
இது நோய் குறித்த உலகளாவிய செயல் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 10 இந்தியர்களில் ஒருவர் தங்களது வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 நபர்களில் ஒருவர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கூடுதலாக 11.6 மில்லியன் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 2018 ஆம் ஆண்டில் 7,84,800 நபர்கள் புற்றுநோயால் இறந்தனர்.
உலகளவில் புகைப்பிடிப்பவர்களில் 50 சதவிகிதத்தினர் சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
வருமானம் குறைந்த நாடுகளில் (ஏழை நாடுகளில்) 2040 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகள் 81% அளவிற்கு அதிகரிக்கும் என்று WHO கணித்துள்ளது.