TNPSC Thervupettagam

WHO நிறுவனத்தின் 2019 உலகளாவிய சுகாதார மதிப்பீடுகள்

December 17 , 2020 1362 days 556 0
  • இந்தப் புதிய தரவுவானது  2000 ஆம் ஆண்டு முதல் முதல் 2019 ஆண்டு வரையிலான தரவுகளை உள்ளடக்கியுள்ளது.
  • உலகில் ஏற்படும் இறப்புகளுக்கான முதன்மை காரணங்களுள் பத்தில் ஏழு தொற்றா நோய்களால் ஏற்படுகிறது.
  • நீரிழிவு நோய் மற்றும் டிமென்ஷியா ஆகியவை உலகின் முதல் 10 இறப்புக் காரணங்களில் ஒன்றாகும்.
  • கடந்த 20 ஆண்டுகளாக உலக அளவில் மரணத்திற்கு இதய நோய் ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.
  • தொற்று நோய்களால் ஏற்படும் இறப்புகள் உலகளவில் சரிவைக் கண்டுள்ளது.
  • கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக (2000 ஆம் ஆண்டில்) இருந்த சராசரி ஆயுட்காலமானது 2019 ஆம் ஆண்டில் 73 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதை ஒப்பிடும் போது மனித ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்பதையும் கண்டறிய முடிகிறது.
  • அமெரிக்காவில், ஊனநிலை மற்றும் இறப்பு இரண்டிலும் போதைப் பொருள் பயன்பாடு ஒரு முக்கிய காரணியாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்