உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) ஆனது அறிவுசார் சொத்து, மரபணு வளங்கள் மற்றும் அது தொடர்புடைய மரபார்ந்த தகவல்கள் (ஒப்பந்தம்) தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆனது, முதன்மையாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய மதி நுட்பத்திலிருந்து பெறப்பட்ட காப்புரிமை விண்ணப்பங்களில் மரபணு பொருட்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த உடன்படிக்கையானது மரபுவழியின் செயல்பாட்டு அலகுகளைக் கொண்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அல்லது பிற தோற்றத்தின் எந்தவொரு பொருளாகவும் 'மரபணுப் பொருள்' இருக்கலாம் என்று வரையறுக்கிறது.