2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் காப்புரிமைகள் மற்றும் தொழில்துறை தாக்கல்கள் இரட்டிப்பாகச் செய்யும் அதே வேளையில் வர்த்தக முத்திரைகள் 60% அளவிற்கு அதிகரித்தன.
இந்தியாவின் காப்புரிமைத் தாக்கல்கள் தற்போது சுமார் 15.7% அளவிற்கு அதிகரித்து 64,480 காப்புரிமைத் தாக்கல்களுடன் உலகளவில் 6வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் சுமார் 3.2 மில்லியன் பதிவுகளுடன் வர்த்தக முத்திரைப் பதிவுகளில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் காப்புரிமை-GDP விகிதமானது 144 என்ற அளவில் இருந்து 381 ஆக உயர்ந்துள்ளது.
வர்த்தக முத்திரைகளைத் தாக்கல் செய்வதில் 2023 ஆம் ஆண்டில் உள்நாட்டவரின் 90% பதிவுகளுடன் வர்த்தக முத்திரைத் தாக்கல் 6.1% அதிகரித்து இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் 36.4% அதிகரிப்புடன் தொழில்துறை வடிவமைப்புத் தாக்கல்களில் இந்தியா உலகளவில் 10வது இடத்திற்கு முன்னேறியது.