TNPSC Thervupettagam

WIPO காப்புரிமைத் தாக்கல் 2023 – இந்தியா

November 15 , 2024 13 days 70 0
  • 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் காப்புரிமைகள் மற்றும் தொழில்துறை தாக்கல்கள் இரட்டிப்பாகச் செய்யும் அதே வேளையில் வர்த்தக முத்திரைகள் 60% அளவிற்கு அதிகரித்தன.
  • இந்தியாவின் காப்புரிமைத் தாக்கல்கள் தற்போது சுமார் 15.7% அளவிற்கு அதிகரித்து 64,480 காப்புரிமைத் தாக்கல்களுடன் உலகளவில் 6வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் சுமார் 3.2 மில்லியன் பதிவுகளுடன் வர்த்தக முத்திரைப் பதிவுகளில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • கடந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் காப்புரிமை-GDP விகிதமானது 144 என்ற அளவில் இருந்து 381 ஆக உயர்ந்துள்ளது.
  • வர்த்தக முத்திரைகளைத் தாக்கல் செய்வதில் 2023 ஆம் ஆண்டில் உள்நாட்டவரின் 90% பதிவுகளுடன் வர்த்தக முத்திரைத் தாக்கல் 6.1% அதிகரித்து இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 36.4% அதிகரிப்புடன் தொழில்துறை வடிவமைப்புத் தாக்கல்களில் இந்தியா உலகளவில் 10வது இடத்திற்கு முன்னேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்