TNPSC Thervupettagam

WMO அமைப்பின் காற்றுத் தரம் மற்றும் பருவநிலை அறிக்கை

September 15 , 2023 441 days 262 0
  • உலக வானிலை அமைப்பின் சமீபத்திய அறிக்கையானது பருவநிலை மாற்றம், வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் ஓசோன் பாதிப்பு உள்ளிட்ட அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை எடுத்துரைக்கிறது.
  • பருவநிலை மாற்றம் ஆனது வெப்ப அலைகள் உருவாகும் கால இடைவெளி மற்றும் தீவிரத்தை அதிகரிக்கிற நிலையில் இது காட்டுத்தீயின் அபாயத்தையும் அதன் தீவிரத்தையும் அதிகரிக்கிறது.
  • காட்டுத் தீயில் இருந்து வரும் புகையில் காற்றின் தரம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பயிர்களின் மீது எதிர்மறையான பாதிப்பினை உண்டாக்கும் மாசுகள் உள்ளன.
  • வெப்ப அலைகள் காற்றின் தரப் பிரச்சினைகளை அதிகப்படுத்தி, ஓசோன் மற்றும் நுண்துகள்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
  • அதிக வெப்பநிலை மற்றும் தூசுப்படல அளவுகளின் கலவையானது உலகளவில் மனித ஆரோக்கியத்தையும் வேளாண்மையினையும் பாதித்துள்ளது.
  • இந்தியா மற்றும் சீனாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிக பயிர் இழப்புகள் பதிவாகி உள்ளன.
  • உலக வானிலை அமைப்பானது பருவநிலை மாற்றம் மற்றும் காற்றின் தரம் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதை வலியுறுத்தி, இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த தீர்வுகளை மேற்கொள்ளச் செய்யுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்