TNPSC Thervupettagam

WMO பசுமை இல்ல வாயு அறிக்கை

November 2 , 2024 64 days 117 0
  • பசுமை இல்ல வாயுக்களின் அளவு ஆனது கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 2023 ஆம் ஆண்டில் ஒரு புதிய சாதனை அளவினை எட்டியுள்ளது.
  • கார்பன் டை ஆக்சைட்டின் உலகளாவியச் சராசரி மேற்பரப்பு செறிவு ஆனது 420 ppm (ஒரு மில்லியனுக்கு எவ்வளவு பாகங்கள்) என்ற அளவினை எட்டியது.
  • 2023 ஆம் ஆண்டில் மீத்தேன் ஆனது 1934 ppbகளையும் (ஒரு பில்லியனுக்கு எவ்வளவு பாகங்கள்), நைட்ரஸ் ஆக்சைடு 336.9 ppbகளையும் எட்டின.
  • இந்த மதிப்புகள் ஆனது முறையே தொழில்துறைக்கு முந்தைய அளவினை விட (1750 ஆம் ஆண்டிற்கு முன்) 151%, 265% மற்றும் 125% அளவிலானவையாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் உள்ள CO2 வாயுவின் அதிகரிப்பு ஆனது 2022 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது.
  • 2.3 ppm என்ற வருடாந்திர அதிகரிப்பு ஆனது, 2 ppmக்கும் அதிகமான அதிகரிப்புடன் கூடிய 12வது தொடர் அதிகரிப்பினைக் குறிக்கிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில், CO2 வாயுவின் அளவு ஆனது 2004 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்ட 377.1 ppm அளவை விட 11.4% (42.9 ppm) அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்