பசுமை இல்ல வாயுக்களின் அளவு ஆனது கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 2023 ஆம் ஆண்டில் ஒரு புதிய சாதனை அளவினை எட்டியுள்ளது.
கார்பன் டை ஆக்சைட்டின் உலகளாவியச் சராசரி மேற்பரப்பு செறிவு ஆனது 420 ppm (ஒரு மில்லியனுக்கு எவ்வளவு பாகங்கள்) என்ற அளவினை எட்டியது.
2023 ஆம் ஆண்டில் மீத்தேன் ஆனது 1934 ppbகளையும் (ஒரு பில்லியனுக்கு எவ்வளவு பாகங்கள்), நைட்ரஸ் ஆக்சைடு 336.9 ppbகளையும் எட்டின.
இந்த மதிப்புகள் ஆனது முறையே தொழில்துறைக்கு முந்தைய அளவினை விட (1750 ஆம் ஆண்டிற்கு முன்) 151%, 265% மற்றும் 125% அளவிலானவையாகும்.
2023 ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் உள்ள CO2 வாயுவின் அதிகரிப்பு ஆனது 2022 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது.
2.3 ppm என்ற வருடாந்திர அதிகரிப்பு ஆனது, 2 ppmக்கும் அதிகமான அதிகரிப்புடன் கூடிய 12வது தொடர் அதிகரிப்பினைக் குறிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில், CO2 வாயுவின் அளவு ஆனது 2004 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்ட 377.1 ppm அளவை விட 11.4% (42.9 ppm) அதிகரித்துள்ளது.