TNPSC Thervupettagam

WMO அமைப்பின் இயற்கை அபாயங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள்

May 28 , 2023 418 days 225 0
  • சமீபத்தில் உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவனம் வானிலை, காலநிலை மற்றும் நீர் தொடர்பான ஆபத்துகளிலிருந்து இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகளின் மீதான புதுப்பிக்கப் பட்டத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
  • வங்கதேசத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் அதிக கால நிலை தொடர்பான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
  • வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மனித உயிரிழப்புகளை இந்தியாவும் மியான்மரும்  பதிவு செய்துள்ளன.
  • உலகளாவிய அளவில் 1970 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் 11,778 பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன.
  • இவை அனைத்திற்கும் தீவிர வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் நீர் தொடர்பான நிகழ்வுகளே காரணமாக உள்ளது.
  • இந்த நிகழ்வுகள் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் $4.3 டிரில்லியன் அளவிலான பொருளாதார இழப்பையும் விளைவித்தன.
  • வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய வகையில் அதிக எண்ணிக்கையிலான பேரழிவுகள் ஆசியாவில் பதிவாகியுள்ளன.
  • ஆசியாவிற்கு அடுத்த படியாக, இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பேரழிவுகள் வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை உள்ளடக்கியப் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்