TNPSC Thervupettagam

WOAH குறிப்பிட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வகம்

November 13 , 2024 12 days 40 0
  • அரியானாவின் ஹிசார் என்னுமிடத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய குதிரையினங்கள் தொடர்பான ஆராய்ச்சி மையம் (ICAR-NRC குதிரை) ஆனது, குதிரையின உண்ணிக் காய்ச்சல் (பைரோபிளாஸ்மோசிஸ்) என்ற நோய்க்கான உலக விலங்கு நல (WOAH) ஒரு பிரத்தியேக (குறிப்பிட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான) ஆய்வகமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 0.55 மில்லியன் குதிரை இனங்கள் (குதிரைகள், மட்டக் குதிரை, கழுதைகள், கோவேறுக் கழுதைகள்) உள்ளன.
  • குதிரையின உண்ணிக்காய்ச்சல் ஆனது, உண்ணிகள் மூலம் பரவக்கூடிய பாபேசியா கபாலி மற்றும் தைலேரியா ஈக்வி போன்ற புரோட்டோசோவா ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
  • அவை குதிரைகள், கழுதைகள், கோவேறுக் கழுதைகள், மற்றும் வரிக்குதிரைகளை பாதிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்