வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு வெளியே ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் ஒரு முக்கியமான தருணத்தைப் படம்பிடித்த முதல் விரிவான புகைப்படத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
WOH G64 என்று அழைக்கப்படுகின்ற இந்த நட்சத்திரம் ஆனது, மிகவும் வியக்கத்தக்க வகையில் சுமார் 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய சீரற்ற பெரு விண்மீன் திரளில் (மாகெல்லானிக் கிளவுட்) அமைந்துள்ளது.
WOH G64 என்பதற்கு "பெஹிமோத் நட்சத்திரம்" என்று செல்லப் பெயர் வழங்கப் பட்டு உள்ளது.
WOH G64 நமது சூரியனை விட தோராயமாக 2,000 மடங்கு அளவு கொண்ட செந்நிற மீப்பெரு நட்சத்திரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.