உலகில் அகதிகளின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலகம் முழுவதும் ஜூன் 20-ம் நாள் உலக அகதிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை கடைபிடிப்பது அகதிகளின் அவலநிலைக்கான கவனத்தை ஈர்க்கவும், அவர்களின் தைரியம் மற்றும் பொறுமை ஆகியவற்றை கொண்டாடவும், அவர்களது சிக்கல்களைக் களைவதற்கான உறுதிமொழியை புதுப்பிக்கவும் உதவும்.
உலக அகதிகள் தினம் 2018-ன் கருத்துருவானது Now more than ever, We need to stand with Refugees – முன்பைக் காட்டிலும் தற்போது நாம் அவர்களுக்காக கவனம் செலுத்த வேண்டும்.
ஐ.நா. பொது சபையில் 4 டிசம்பர் 2000-ம் அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா. அகதிகள் மாநாடு 1951 என்பதின் 50வது ஆண்டின் நினைவாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துருக்களுடன் அனுசரிக்கப்படுகிறது.