TNPSC Thervupettagam
April 5 , 2023 473 days 276 0
  • தகவல் சமூகம் குறித்த உலக உச்சி மாநாடு (WSIS) என்பது யுனெஸ்கோ, UNDP மற்றும் UNCTAD ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஒருங்கிணைக்கப் படும் ஒரு வருடாந்திர விருது வழங்கீட்டு நிகழ்வாகும்.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, ‘மீண்டும் எழுச்சிப் பெறுவதற்கான WSIS செயல் விதிகள் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதைத் துரிதப்படுத்துதல்’ என்பதாகும்.
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (MoPR) மற்றும் தேசியத் தகவல் மையம் (NIC) ஆகியவை, அதன் இயங்கலைத் தணிக்கை மென்பொருள் திட்டத்திற்காக 2023 ஆம் ஆண்டு WSIS மன்றத்தில் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளது.
  • செயல்விதிகள் தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாடுகள் பிரிவில் அதிக வாக்குகளைப் பெற்ற திட்டம் எனும் அடிப்படையிலான மின்னாளுகைப் பிரிவின் கீழ் இயங்கலைத் தணிக்கை முறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த மென்பொருள் பஞ்சாயத்து அமைப்புகளின் மூன்று நிலைகளிலும் உள்ள கணக்குகளின் நிதித் தணிக்கையை மேற்கொள்வதனை எளிதாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்