TNPSC Thervupettagam
September 16 , 2020 1411 days 676 0
  • மேற்கு வங்காள மாநில அரசானது தனது சம்பூஜ் சாதி என்ற திட்டத்திற்காக WSIS விருது 2020 என்பதை (World Summit on the Information Society  - தகவல் சமூகம் மீதான உலக மாநாடு) வென்றுள்ளது.
  • கன்யா ஸ்ரீ திட்டத்திற்குப் பிறகு, மற்றொரு மேற்கு வங்காள மாநில அரசுத் திட்டமானது மின் ஆளுகை வகையின் கீழ் ஓர் உலகளாவிய பரிசை வென்று உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றில் பயிலுகின்ற அரசால் நிர்வகிக்கப் படும், அரசால் ஆதரவளிக்கப்படும், நிதியுதவி அளிக்கப்படும் பள்ளி மாணவர்கள் மற்றும் மதராசா பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
  • இது பள்ளி இடைநிற்றல் பிரச்சினையை, அதிலும் குறிப்பாக வங்காள மாநிலத்தின்  கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றல் பிரச்சினையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு வரை அவர்கள் பள்ளி கல்வியைத் தொடரச் செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் இலக்காகக் கொண்ட நிபந்தனையுடன் கூடிய பணப் பரிமாற்றத் திட்டமான கன்யாஸ்ரீ பிரகல்பா திட்டமானது ஐக்கிய நாடுகளின் விருதைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்