TNPSC Thervupettagam

WSIS விருதுகள்

April 14 , 2019 1926 days 529 0
  • மேற்கு வங்காள அரசின் இரண்டு திட்டங்களான “உட்கார்ஷ் பங்களா” மற்றும் “சபோஜ் சாதி” ஆகியவை ஐக்கிய நாடுகளின் தலைமையின் கீழ் தகவல் சமூகம் மீதான உலக மாநாட்டு (WSIS - World Summit on the Information Society) விருதை வென்றுள்ளது.
  • இந்த WSIS விருதுகள் என்பது தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் சக்தியை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சி சார்ந்த உத்திகளை நடைமுறைப்படுத்தும் தனி நபர்கள், அரசாங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகளை அங்கீகரிக்கும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
  • இந்த நிகழ்வானது முதன்முறையாக 2012 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
உத்கார்ஷ் பங்களா
  • இது உயரிய விருதைப் பெற்றுள்ளது. இது திறன் வளர்ச்சிப் பிரிவில் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் 6 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக திறன் வளர்ச்சிப் பயிற்சியை அளிக்கும் ஒரு திட்டமாகும்.
சபோஜ் சாதி
  • இது மின்னணு அரசுப் பிரிவான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டின் கீழ் முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றாக முதன்மைத் திட்டமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் கீழ் IX முதல் XII வரை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 1 கோடி மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்