TNPSC Thervupettagam

WTO அமைப்பின் உலக வர்த்தகப் புள்ளிவிவரங்கள் 2023

August 9 , 2024 106 days 160 0
  • 2023 ஆம் ஆண்டில், சரக்குகள் மற்றும் வணிகச் சேவைகளில் மேற்கொள்ளப்பட்ட உலக வர்த்தகம் ஆனது சராசரியாக 2% சரிந்து 30.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • பொருட்களில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் ஆனது 5% குறைந்துள்ள அதே சமயம் சேவை சார்ந்த வர்த்தகம் ஆனது 9% அதிகரித்துள்ளது.
  • இதன் விளைவாக, உலகளாவிய வர்த்தகத்தில் 2022 ஆம் ஆண்டில் 77.8% ஆக இருந்த பொருட்களின் வர்த்தகப் பங்கு ஆனது 2023 ஆம் ஆண்டில் 75.3% ஆக குறைந்தது.
  • 22.2% ஆக இருந்த சேவை வர்த்தகத்தின் பங்கு ஆனது 24.7 சதவீதத்தினை எட்டியது.
  • 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக இந்தியா 17வது இடத்திற்கு முன்னேறியது.
  • எரிபொருள்கள் மற்றும் சுரங்கப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
  • இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதியில் இந்தியா 10வது இடத்திலும், இரசாயனங்கள் ஏற்றுமதியில் 8வது இடத்திலும் உள்ளது.
  • ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா 3வது இடத்திலும், துணிகள் ஏற்றுமதியில் 5வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்