2023 ஆம் ஆண்டில், சரக்குகள் மற்றும் வணிகச் சேவைகளில் மேற்கொள்ளப்பட்ட உலக வர்த்தகம் ஆனது சராசரியாக 2% சரிந்து 30.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
பொருட்களில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் ஆனது 5% குறைந்துள்ள அதே சமயம் சேவை சார்ந்த வர்த்தகம் ஆனது 9% அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, உலகளாவிய வர்த்தகத்தில் 2022 ஆம் ஆண்டில் 77.8% ஆக இருந்த பொருட்களின் வர்த்தகப் பங்கு ஆனது 2023 ஆம் ஆண்டில் 75.3% ஆக குறைந்தது.
22.2% ஆக இருந்த சேவை வர்த்தகத்தின் பங்கு ஆனது 24.7 சதவீதத்தினை எட்டியது.
2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக இந்தியா 17வது இடத்திற்கு முன்னேறியது.
எரிபொருள்கள் மற்றும் சுரங்கப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதியில் இந்தியா 10வது இடத்திலும், இரசாயனங்கள் ஏற்றுமதியில் 8வது இடத்திலும் உள்ளது.
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா 3வது இடத்திலும், துணிகள் ஏற்றுமதியில் 5வது இடத்திலும் உள்ளது.