TNPSC Thervupettagam

WTW உலக பாலினச் பாலினச் செல்வ சமநிலை அறிக்கை

November 17 , 2022 737 days 450 0
  • உலகப் பாலினச் பாலினச் செல்வ சமநிலை அறிக்கையினை வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.
  • இது உலகிலுள்ள ஐந்து பிராந்தியங்களில் உள்ள பாலின அடிப்படையிலான சொத்து மதிப்பின் வேறுபாடுகளை மதிப்பிடுகிறது.
  • தொழில், குடும்ப ஆதரவு, வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் நிதிக் கல்வியறிவு ஆகியவற்றின் மீதான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விளைவுகள் போன்ற சமத்துவமின்மையின் பின்னணியில் உள்ள காரணங்களை இது மதிப்பிடுகிறது.
  • இது ஓய்வூதியத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான பாலினச் செல்வ இடைவெளியைக் குறிப்பிடுகிறது.
  • பெண்கள் தமது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது, ​​ஆண்கள் பெறுவது போல் அல்லாமல் 74 சதவீதம் மட்டுமே அவர்கள் பெறுவர்.
  • ஆசிய-பசிபிக் நாடுகளில், இந்திய நாட்டில் பாலினச் பாலினச் செல்வ மதிப்பில் மிக மோசமான இடைவெளி நிலவுகிறது.
  • இந்தியாவின் பாலின ஊதிய இடைவெளியானது உலக சராசரியை விட அதிகமாக உள்ளது.
  • பெண்களுக்கான தலைமைப் பதவிகள் குறைவாகவே உள்ளன.
  • பணியிடத்தில் உள்ள பெண்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே உயர் நிலைப் பதவிகளை வகிக்கின்றனர்.
  • நீண்ட காலம் சார்ந்த நிதி முடிவுகள் பொதுவாக ஆண்களிடத்திலேயே உள்ளது.
  • உழைக்கும் பெண்களின் நிதிக் கல்வியறிவு இந்தியாவில் குறைவாக உள்ளது.
  • சராசரியாக, ஆசியா-பசிபிக் பகுதியில் தான் மிகக் குறைந்த அளவிலான உலகச் செல்வ இடைவெளிகள் பதிவாகியுள்ளது.
  • இந்தப் பிராந்தியத்தில் உள்ள பெண்கள் ஆண்களின் செல்வ நிலைகளில் முக்கால் வாசி (76 சதவீதம்) மட்டுமே சேர்க்கின்றனர்.
  • இது உலகச் சராசரியை விட வெறும் 2 புள்ளிகள் மட்டுமே அதிகமாகும்.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 12 நாடுகளில் உள்ள பாலினச் செல்வ இடைவெளி இந்தியாவில் 64 சதவீதத்திற்கும், சிறந்த செயல்திறன் கொண்ட தென் கொரியாவில் 90 சதவீதத்திற்கும் இடையில் உள்ளது.
  • உலகச் சராசரியுடன் ஒப்பிடச் செய்யும் போது, இந்தக் ​​குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஆறு நாடுகளில் உள்ள பெண்கள் ஓய்வூதியத்தின் போது அதிக செல்வத்தைப் பெறச் செய்கின்றனர்.
  • சீனா (78%), ஜப்பான் (82%), பிலிப்பைன்ஸ் (79%) மற்றும் சிங்கப்பூர் (79%) ஆகியவை இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்