TNPSC Thervupettagam

X-59 சப்தமற்ற மீயொலி விமானம்

January 19 , 2024 311 days 232 0
  • நாசா மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை இணைந்து X-59 விமானத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தின.
  • இது மீயொலி விமானத்தில் ஏற்படும் முக்கிய சிக்கல்களில் ஒன்றான அதிர்வலைகள் மூலம் ஏற்படும் ஒலியை (சோனிக் பூம்) அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • X-1 ரகத்தினை உள்ளடக்கியச் சோதனை விமானங்களின் தொடரில் X-59 சமீபத்திய ரகமாகும்.
  • X-1 ரகமானது, 1947 ஆம் ஆண்டில் ஒலியின் வேகத்தை மிஞ்சி செயல்படும் வகையில் கட்டமைக்கப்பட்ட முதல் ஆளில்லா விமானம் ஆகும்.
  • 1967 ஆம் ஆண்டில் மனிதர்களால் மேக் 6.7 வேகத்தில் இயக்கப்பட்ட மிக வேகமான விமானம் என்ற சாதனையை X-15 கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்