சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட XPoSat ஆய்வுக் கலத்தில் உள்ள விண்கலம் சார்ந்த ஒரு கருவி ஆனது ஒரு மீயொளிர் வீண்முகிலில் இருந்து (ஒரு நட்சத்திரத்தின் வெடிப்பு) வெளிவரும் முதல் ஒளியை வெற்றிகரமாக பதிவு செய்ததாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
XPoSat ஆய்வுக் கலத்தில் உள்ள XSPECT அறிவியல் கருவி, இந்தியாவின் முதல் ஊடுகதிர் முனைவாக்கமானி ஆய்வுத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இது Cassiopeia A (Cas A) மீயொளிர் வீண்முகிலின் எஞ்சிய பகுதியிலிருந்து வெளிவரும் அதன் முதல் ஒளியைப் பதிவு செய்துள்ளது.
ஒரு நட்சத்திரம் அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவை அடைந்து, பேரழிவிற்கு உள்ளாகி, பின்னர் மீண்டு இணையும் போது ஏற்படும் நட்சத்திர வெடிப்பு நிகழ்வு தான் மீயொளிர் வீண்முகில் ஆகும்.