ஜப்பான் நாடானது, XRISM (X-Ray Imaging and Spectroscopy Mission) கலத்தினைச் சுமந்து செல்லும் H-IIA ஏவுகலத்தினை விண்ணில் ஏவியது.
இது NASA மற்றும் JAXA (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) ஆகியவற்றிற்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது.
XRISM விண்கலமானது, ரிசால்வ் மற்றும் Xtend எனப்படும் இரண்டு கருவிகளைக் கொண்டுள்ளது.
ரிசால்வ் கருவியானது விண்வெளிப் பொருளின் கட்டமைப்பு, இயக்கம் மற்றும் நிலை உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக ஒவ்வொரு தனிப்பட்ட ஊடு கதிரின் ஆற்றலையும் அளவிட முடியும்.
பௌர்ணமி நிலவின் புலப்படும் பகுதியின் சராசரி அளவை விட சுமார் 60 சதவீதம் பெரியதாக உள்ள ஒரு பகுதியை Xtend கலம் ஆய்வு செய்கிறது.