அறிவியலாளர்கள் முதன்முறையாக Y குரோமோசோமை வெற்றிகரமாக வரிசைப் படுத்தியுள்ளனர்.
இந்த குறிப்பு விவர வரிசையாக்கமானது, இந்த குரோமோசோமுடன் தொடர்புடைய சூழல்கள் மற்றும் குறைபாடுகளை ஆராய்வதற்கு உதவும்.
Y குரோமோசோம் ஆனது மரபணுவின் "கரும்பொருள்" என்று அழைக்கப்படுகிறது.
நமது மரபணுக் குறியீட்டின் அடிப்படைக் கூறுகளை சரியாக புரிந்து கொள்வதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் 23 இணை மனித குரோமோசோம்களில் குறிப்பிடத்தக்க பகுதிகள் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்தன.
முனைக்கூறு (டெலோமியர்) - முனைக்கூறு (T2T) கட்டமைப்பு எனப்படும் 100 ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச ஆராய்ச்சித் தொகுப்பின் மூலம் கடந்த ஆண்டில் இவை பற்றிய புரிதல்கள் வழங்கப் பட்டன.