TNPSC Thervupettagam

Y குரோமோசோம் பற்றிய புரிதல்

September 5 , 2023 319 days 251 0
  • அறிவியலாளர்கள் முதன்முறையாக Y குரோமோசோமை வெற்றிகரமாக வரிசைப் படுத்தியுள்ளனர்.
  • இந்த குறிப்பு விவர வரிசையாக்கமானது, இந்த குரோமோசோமுடன் தொடர்புடைய சூழல்கள் மற்றும் குறைபாடுகளை ஆராய்வதற்கு உதவும்.
  • Y குரோமோசோம் ஆனது மரபணுவின் "கரும்பொருள்" என்று அழைக்கப்படுகிறது.
  • நமது மரபணுக் குறியீட்டின் அடிப்படைக் கூறுகளை சரியாக புரிந்து கொள்வதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டன.
  • இருப்பினும் 23 இணை மனித குரோமோசோம்களில் குறிப்பிடத்தக்க பகுதிகள் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்தன.
  • முனைக்கூறு (டெலோமியர்) - முனைக்கூறு (T2T) கட்டமைப்பு எனப்படும் 100 ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச ஆராய்ச்சித் தொகுப்பின் மூலம் கடந்த ஆண்டில் இவை பற்றிய புரிதல்கள் வழங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்