ஆண் பாலின குரோமோசோம் என்றும் அழைக்கப்படும் Y குரோமோசோமின் வியத்தகுப் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களை சமீபத்திய ஒரு ஆய்வு வெளிக் கொணர்ந்துள்ளது.
பல்வேறு குரங்கு இனங்களில் உள்ள Y குரோமோசோம் பகுதிகளில் 14-27% மட்டுமே மனிதர்களின் Y குரோமோசோம்களை மிக ஒத்ததாக இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்களும் மற்ற குரங்கு இனங்களும் மிகவும் வித்தியாசமாக பரிணமித்துள்ளன என்பதை இது காட்டுகிறது.
மறுபுறம், X குரோமோசோம்கள் மிகவும் வேறுபட்டவையாக உள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், ஆண் மற்றும் பெண் இருபாலரின் உடலில் உள்ள X குரோமோசோம் இன்னும் நிலையானதாக உள்ளது.
X மற்றும் Y குரோமோசோம்கள் பல உயிரியல் செயல்பாடுகளுடன் சேர்த்து பாலியல் வளர்ச்சி மற்றும் கருவுறுதல் ஆகியவற்றில் பங்கு வகிக்கின்றன.