சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமானது #YesIBleed எனும் மாதவிடாய் தூய்மைப் பிரச்சாரத்தை (Menstrual Hygiene Campaign) தொடங்கியுள்ளது.
மாதவிடாய் (Menstruation) தொடர்பான விவகாரங்களுக்கு ஓர் முழுமையான அணுகுமுறையை (holistic approach) உருவாக்குவதே இந்த #YesIBleed பிரச்சாரத்தின் இரண்டாவது பதிப்பினுடைய நோக்கமாகும்.
தூய்மைப் பாதுகாப்பு : அனைத்துப் பெண்களினுடைய சுகாதார உரிமை (“Sanitary Protection: Every Woman’s Health Right”) என்ற ஆய்வின் முடிவுகளின் படி வெறும் 12 சதவீத இந்தியப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களின் அணுகலை பெற்றுள்ளனர். மீதம் 88 சதவீத இந்திய பெண்கள் சானிட்டரி நாப்கின்களின் விலை மலிவற்ற தன்மையின் (Unaffordable) காரணமாக அவற்றிற்கான அணுகலை பெறாமல் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையானது மாதவிடாய் தூய்மையை (Menstrual Hygiene) உலகளாவிய பொது ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைப் பிரச்சனையாக அங்கீகரித்துள்ளது.
மாதவிடாய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை பரப்புவதற்காக முகநூல், யூடியூப் உட்பட அனைத்து பல்-ஊடக (Multi-media) சமூக தளங்கள் முழுவதும் முறையாக இந்த #YesIBleed பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.