மதிப்புமிக்க YouGov India நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு மதிப்பீட்டுத் தரவரிசையில் குஜராத் கூட்டுறவுப் பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Amul) ஆனது இந்தியாவின் மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ள மிகவும் அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் அமுல் நிறுவனமும் ஒன்றாக விளங்குகிறது.
அமேசான் 56.5 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் 53.0 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இந்தத் தரவரிசை விமான நிறுவனங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தித் துறை, காப்பீடு, பயண முன்பதிவு மற்றும் இணைய வணிகம் உள்ளிட்ட ஆறு முக்கியத் தொழில்துறைகளை உள்ளடக்கியது.