TNPSC Thervupettagam

Z – சோதனை (ஸ்கேன்) முறை

May 19 , 2020 1526 days 701 0
  • சமீபத்தில் தன்பாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (இந்திய சுரங்கப் பள்ளி) மற்றும் சிஎஸ்ஐஆர் – இந்திய இரசாயன உயிரியல் மையம் (கொல்கத்தா) ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் Z – சோதனை (ஸ்கேன்) முறையை மேம்படுத்தியுள்ளனர்.
  • இது மனிதர்களில் பார்கின்சன் நோயின் உருவாக்கம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவுகின்றது.
  • இது Asyn-யின் திரட்டல் மற்றும் நியூரான் செல்களின் இறப்பு ஆகியவற்றில் ஆரம்ப கால நிலை மற்றும் இறுதிக்கட்ட நிலை ஆகிய இரண்டையும் கண்காணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • “ஆல்பா - சைநியூக்ளின்” (Asyn) என்று அழைக்கப்படும் ஒரு புரதத்தின் திறன் ஆனது பார்கின்சன் நோயின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றது. 
  • பார்கின்சன் நோய் என்பது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட, சிதைவு கொண்ட நரம்புப் பிரச்சினையாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்