மத்திய சுகாதாரத் துறையானது, ZooWIN என்ற ஒரு எண்ணிமத் தளத்தினை அறிமுகப் படுத்தி யுள்ளது.
நாடு முழுவதும் வெறிநாய்க்கடி நோய்ப் பாதிப்பிறகு எதிரானத் தடுப்பூசிகள் (ARV) மற்றும் பாம்புக் கடி விஷத் தடுப்பு மருந்து (ASV) ஆகியவற்றின் நிகழ்நேரக் கிடைக்கும் தன்மையைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக இது வடிவமைக்கப் பட்டு உள்ளது.
Co-WIN மற்றும் U-WIN தளங்களைப் போலவே, இந்த ZooWIN தளமானது தரவுகளை நன்கு மையப்படுத்தி சுகாதார சேவை வழங்கும் அமைப்புகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடை நலச் சேவைகளை வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், வெறி நாய்க் கடி நோய் காரணமாக உலகளவில் பதிவான உயிரிழப்புகளில் சுமார் 36 சதவீதம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
கூடுதலாக, பாம்புக் கடியின் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50,000 உயிரிழப்புகள் பதிவாகின்றன.