தெலுங்கானாவின் பாரம்பரியத் துறையானது சமீபத்தில் புகழ்பெற்ற பௌத்தப் பாரம்பரியத் தளமான ஃபனிகிரியில் நாணயப் புதையல் ஒன்றைக் கண்டறிந்துள்ளது.
3,730 எண்ணிக்கையிலான நாணயங்களின் முன்பக்கத்தில் யானைச் சின்னமும், பின்புறத்தில் உஜ்ஜயினி சின்னமும் இருந்தன.
இந்த நாணயங்கள் இக்ஷ்வாகு காலத்தைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வுகள் முடிவு செய்தன.
இந்தக் கிராமம் ஆனது கி.மு. 1000 முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரையில் அதிக செயல்பாடு மிக்க வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.