ஃபரக்கா என்ற தடுப்பணை ஆனது, இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கை நதியின் குறுக்கே அமைந்துள்ள ஒரு தடுப்பணையாகும்.
இந்தத் தடுப்பணையின் கட்டுமானம் ஆனது, 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியன்று செயல்பாட்டுக்கு வந்தது.
கொல்கத்தா துறைமுகத்திலிருந்து வண்டல் படிவுகளை வெளியேற்றுவதற்காக என்று கங்கை நதியிலிருந்து ஹூக்ளி என்ற நதிக்கு நீரைத் திருப்பி விடச் செய்வதே இந்தத் தடுப்பணையின் நோக்கமாகும்.
இந்தியாவும் வங்காளதேசமும் கங்கை நீர்ப் பகிர்வு தொடர்பாக 1977 ஆம் ஆண்டு ஃபராக்கா ஒப்பந்தம் மற்றும் 1996 ஆம் ஆண்டு கங்கை நீர் ஒப்பந்தம் போன்ற இரு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.