ஸ்பேஸ்எக்ஸ் விண்கல நிறுவனமானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் கனரக ஏவுகலத்தினை விண்ணில் ஏவியது.
ஃபால்கன் கனரக ஏவுகலம் என்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட பகுதியளவு மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு கனரகச் செலுத்து வாகனமாகும்.
2022 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய 50வது ஏவுதல் இதுவாகும்.
இது 2 முதல் நிலை உந்துவிசை வழங்கீட்டு மோட்டார்களை (ஸ்ட்ராப்-ஆன் பூஸ்டர்) கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஏவுகலன் ஆகும்.
இரண்டு பக்கவாட்டு நிலை விசை வழங்கீட்டு மோட்டார்கள் மூலம் மீண்டும் பெறப் பட்ட நிகழ்வானது சுற்றுப்பாதையில் உள்ள ஏவுகலங்களின் 150வது மற்றும் 151வது மீள்வினைக் குறிக்கிறது.
தற்போது இயங்கி வரும் ஏவுகல வாகனங்களில் இது அதிகப் பொருட்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.
இது ஏவப்படும் சமயத்தில் சுமார் 5 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான உந்துதலை இதனால் உருவாக்க இயலும்.
இது சுமார் பதினெட்டு 747 ரக விமானங்களுக்குச் சமமாகும்.