- உலகின் மிகப் பழமையான காண்டாமிருகம் என்று நம்பப்பட்ட ஃபாஸ்டா என்ற கருப்பு நிறம் கொண்ட பெண் காண்டாமிருகமானது தனது 57வது வயதில் தான்சானியாவின் இயற்கைப் பாதுகாப்பு பகுதியில் இறந்துள்ளது.
- ஃபாஸ்டா காண்டாமிருகமானது இயற்கைக் காரணங்களினால் நாகோரோங்கோரோ இயற்கைப் பாதுகாப்பு ஆணையப் பகுதியில் காலமானது.
- காடுகளில் வாழும் காண்டாமிருகத்தின் எதிர்பார்க்கப் படும் ஆயுட்காலம் சுமார் 40 ஆண்டுகளாகும். ஆனால் இவை அடைத்து வைத்து வளர்க்கப்பட்டால் கூடுதலாக பத்து ஆண்டுகள் உயிர் வாழும் திறன் கொண்டுள்ளன.
கருப்பு காண்டாமிருகம் பற்றி
- இது ‘கருப்பு மூக்குக் கொம்பு காண்டாமிருகம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
- இவை கென்யா, தான்சானியா, நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளைச் சுற்றிலும் காணப் படுகின்றன.
- தென்மேற்கு கருப்பு காண்டாமிருகம் பாதிக்கப்படக் கூடியது என வகைப்படுத்தப் பட்டாலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் இதன் நிலை: மிக அருகி வரும் இனம் .