TNPSC Thervupettagam
July 9 , 2024 137 days 272 0
  • இங்கிலாந்து நாட்டுப் புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான பிராங்க் டக்வொர்த் சமீபத்தில் காலமானார்.
  • டக்வொர்த்-லூயிஸ் முறையானது, டக்வொர்த் மற்றும் அவரது சகப் புள்ளியியல் வல்லுனர் டோனி லூயிஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
  • மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த முறை முதன்முதலில் 1997 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாற்றியமைக்கப்பட்ட இலக்குகளை நிர்ணயிப்பதற்கான நிலையான முறையாக இது சர்வதேச கிரிக்கெட் சபையினால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • பின்னர், ஆஸ்திரேலிய புள்ளியியல் நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் இதில் மேலும் சில மாற்றங்களைச் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்