TNPSC Thervupettagam

ஃபுலானி சமூகம் - ‘பசுமை சஹாரா’ காலம்

February 18 , 2025 5 days 87 0
  • ஆப்பிரிக்காவின் மிகப்பெரியதொரு இடையர்/ஆயர் பிரிவினரில் ஒன்றான ஃபுலானி, 'பசுமை சஹாரா' காலத்தினைச் சேர்ந்ததற்கான (தற்போதைய காலக் கட்டத்திற்கு 12,000 - 5,000 ஆண்டுகளுக்கு முன்பு) ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது.
  • சுமார் 40 மில்லியன் என்ற எண்ணிக்கையினைக் கொண்ட ஃபுலானி மக்கள், மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் ஏரி வரையிலான பகுதிகளில் காணப்படுகின்றனர்.
  • அவர்கள் பிரதானமாக நைஜீரியா, மாலி, கினியா, செனேகல் மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் அதிகமாக உள்ளனர், ஆனால் பல நாடுகளிலும் காணப்படுகின்றனர்.
  • இவர்கள் ஃபுலானிகள் மகியாயா (மேய்ப்பர்கள்), ஃபுலானின் சோரோ (நகரங்களில் வசிப்பவர்கள்) மற்றும் காடுகளில் வாழும் ஃபுலானியைக் குறிக்கின்ற பராரோ என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் மிகவும் பெரும்பாலும் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர் என்பதோடு அவர்கள் கண்டுபிடிக்கக் கூடியதொரு தொல்லியல் சான்றுகளை விட்டுச் செல்லாத வகையிலான சில தற்காலிக முகாம்கள் அல்லது நடமாடும் கூடாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்