மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்திற்கான அணு சக்தித் துறையின் ஒரு அங்கமான இராஜா ரமன்னா மையம் நீரிலுள்ள யுரேனியத்தின் அளவை அளவிட ஃபுளோரி மீட்டர் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது.
இக்கருவியானது நீரில்1 PPB (Parts per Billion) முதல் 100 PPB வரை யுரேனியத்தின் அளவை அளவிடும் சக்தி கொண்டதாகும்.
அதிகளவில் இந்த கருவிகளை உற்பத்தி செய்வதற்காக அணுசக்தித் துறையானது தன்னுடைய இந்தத் தொழில்நுட்பத்தைத் தன்னுடைய மற்றொரு அங்கமான இந்திய மின்னணுவியல் கழகத்திற்கு அளித்துள்ளது.
பஞ்சாப்பில் நீர் வளங்களில் யுரேனியம் அபாயகரமான அளவில் இருப்பதால் யுரேனியத்தை அளவிட அங்கு இக்கருவிகள் உதவிகரமாக இருக்கும்.
யுரேனியம் என்பது கதிர்வீச்சு மூலக்கூறாகும். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமானது குடிநீரில் யுரேனியத்தின் அளவானது 66 PPB வரை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளது.